இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

How to remove pimples naturally and permanently ? முகப்பருக்களை சரி செய்யும் வாழைப்பழத்தோல்..!

How to remove pimples naturally and permanently ? முகப்பருக்களை சரி செய்யும் வாழைப்பழத்தோல்..!

வாழைப்பழத்தோலில் டிரிப்டோபான் என்ற வேதிப்பொருள் நிரம்பியுள்ளது, இது தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது.

How to remove pimples naturally and permanently ?

How to remove pimples naturally and permanently ?

தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் அதன் தோலில் உள்ள நன்மைகள் பற்றி அறியாமல் அதனை தூக்கி எரிந்து விடுவார்கள். வாழைப்பழ தோலிலும் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது,

இதன் தோல்களில் பூஞ்சை எதிர்ப்பு கலவை, ஆண்டிபயாடிக், ஃபைபர், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் பிற சத்துக்களும் நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தோலில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

மேலும், இதிலுள்ள வைட்டமின் டீ12 மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், நரம்பு மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்குகிறது. வாழைப்பழத் தோலில் தூக்கத்தை தூண்டும் தன்மை உள்ளது .

வாழைப்பழத் தோலைக் கொண்டு இரவு நேரத்தில் மரு இருக்கும் இடங்களில் நன்றாக தேய்த்துவந்தால் மருக்கள் நீங்குவதோடு, புதிதாக மருக்களும் உருவாகாமல் இருக்கும்.

வாழைப்பழத்தோல் பெருங்குடலை சுத்தப்படுத்தி மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகின்றன.

மேலும் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி சிறந்த நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

வாழைப்பழத்தோல்கள் அழற்சிஎதிர்ப்பு பண்புகள் அதிகம் நிறைந்தவை. எனவே இவை அனைத்து வகையான அழற்சிகளையும் நீக்க உதவும்.

தடிப்பு, தோல் அழற்சி, அரிப்பு, பூச்சி கடித்தல், தடிப்புகள், சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகள் குணமாவதற்கும் வாழைப்பழத்தோல் உதவுகிறது.

வாழைப்பழத்தோல்கள் உங்கள் உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களை பாதுகாக்க உதவுகின்றன. குறிப்பாக பச்சை வாழைப்பழத் தோல்கள் ரத்த சிவப்பு அணுக்களை அதிகரிக்கிறது.

மேலும் இது நம் தமனியின் சுவர்களில் கொழுப்பு ஒட்டாமல் தடுக்கிறது. இதனால் நம் உடலில் இருந்து பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை அகற்றஉதவும்.

முகப்பரு அதிகமாக இருப்பவர்கள் வாழைப்பழத்தின் தோலை பருக்கள் அதிகம் வரும் பகுதியில் தேய்த்து 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இப்படி தினந்தோறும் செய்து வந்தால், அதில் உள்ள உட்பொருட்கள், முகப்பரு பிரச்சனையில் இருந்து பாதுகாக்கும். இதனால் முகப்பருக்கள் குறைந்து தழும்புகளும் மறையும்.

Also Read: Chow Chow health benefits: சௌ சௌ சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?

வாழைப்பழ தோலை தினமும் பற்களில் தேய்த்து வந்தால் மஞ்சள் கரை நீங்கி பல் ஆரோக்கியமாக இருக்கும் .

இத்தனை வகையில் பயன்படும் இவ்வாழைப்பழத் தோலினை தூக்கி எரியாமல் அதன் பயன் அறிந்து பலன்பெறுவோம்.