இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்பழங்கள்

Diet For Diabetes: சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..?

Diet For Diabetes: சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..?

சர்க்கரை நோய் நோயிருப்பவர்கள் எந்த உணவை எடுத்துகொண்டாலும் மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீரிழிவு நோயிருப்பவர்கள் இரத்த சர்க்கரை அளவை மிதமாக வைத்துகொள்ள வேண்டும்.

Diet For Diabetes

Fruits For Diabetics:

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவு வகைகளில் நம் பாரம்பரிய உணவுகள் எல்லாவற்றுக்கும் தனி இடம் உண்டு.

நாட்டு காய்கறிகள், நாட்டு பழங்கள் வரிசையில் கொய்யாவுக்கு தனி இடம் உண்டு.

நீரிழிவு நோய் கொண்டிருப்பவர்கள் ஏன் கொய்யாவை அதிகம் சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.

கொய்யா தனித்துவமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. எல்லா காலங்களிலும் கொய்யா கிடைக்கும் என்றாலும் பருவகாலத்தில் கொய்யா அதிகமாக கிடைக்கும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ளே வெண்மையான கூழ் போன்ற விதைகளுடன் இனிப்பு சுவை கொண்ட பழமான கொய்யா சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழமாக சொல்லப்பட முக்கிய காரணங்கள் உண்டு.

நீரிழிவு நோயாளிகள் எடுத்துகொள்ள வேண்டிய உணவு வகைகளை குறைந்த கிளைசெமிக் உணவுகள், அதிக கிளைசெமிக் உணவுகள், மிதமான கிளைசெமிக் உணவுகள் என்று வகைப்படுத்தியிருக்கிறார்கள்.

குறைந்த கிளைசெமிக் உணவுகள் சர்க்கரை, மாவுச்சத்து கொண்டிருந்தாலும் கூட அதன் குணங்கள் பொறுத்து சர்க்கரை நோயாளிகள் எடுத்துகொள்ளலாம்.

அது போல் இனிப்பான கொய்யா குறைவான கிளைசெமிக் குறியீட்டை கொண்டிருப்பதாக வகைப்படுட்தப்பட்டுள்ளது.

குறைந்த வகை கிளைசெமிக் உணவுகள் சாப்பிட்ட பிறகு ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பில்லை.

இவை செரிமானத்தை தாமதமாக்குகிறது. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக இல்லாமல் தாமதமாக படிப்படியாக சேர்கிறது.

காலை உணவின் போது பழங்களை எடுத்துகொள்வதாக இருந்தால் நீங்கள் கொய்யாவை மட்டுமே தேர்வு செய்யலாம்.

காலை உணவுக்கு பிறகு மதிய உணவுக்கு முன்பு சிற்றுண்டிக்கும் கொய்யா சிறந்தவையாக பரிந்துரைக்கப்படுகிறது.

மாலை நேரங்களிலும் கொய்யாவை சிற்றுண்டியாக எடுத்துகொள்ளலாம்.

Diet For Diabetes:

அதே நேரம் கொய்யா சிறந்தது என்று உணவுக்கு மாற்றாக வெறும் கொய்யாவை மட்டும் சாப்பிடுவது சரியான தீர்வாக இருக்காது என்பதையும் மனதில் கொள்வது நல்லது.

கொய்யா குறைவான கலோரி கொண்டவை என்பதால் இது எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது.

அதிக எடை என்பது ரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கு காரணம் ஆகும்.

UN வேளாண்மைத் துறையின் தரவுகளின் படி 100 கிராம் கொய்யாப்பழத்தில் 68 கலோரிகளும், 8.92 கிராம் இயற்கை சர்க்கரையும் உள்ளது.

கொய்யாப்பழத்தில் சோடியம் அளவு குறைவாகவும், பொட்டாசியம் அளவு அதிகமாகவும் உள்ளது. இதுவும் நீரிழிவு இருப்பவர்களுக்கு நன்மை செய்யகூடியதே.

கொய்யா குறைவான கலோரி கொண்டவை என்பதால் இது எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது.

கொய்யாப்பழத்தில் சோடியம் அளவு குறைவாகவும், பொட்டாசியம் அளவு அதிகமாகவும் உள்ளது. இதுவும் நீரிழிவு இருப்பவர்களுக்கு நன்மை செய்யகூடியதே.

கொய்யா வைட்டமின் சி- யின் நிறைந்த ஆதாரம். ஆரஞ்சு காட்டிலும் கொய்யாவில் வைட்டமின் சி நான்கு மடங்கு உள்ளது.

Also Read: How to increase platelets: ஆன்டி-ஆக்சிடண்டுகள் நிறைந்த எளிமையான உணவுகள் என்னென்ன?

இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நாள்பட்டு இருந்தால் நோயை எதிர்த்து போராடுவதற்கும் இந்த ஊட்டச்சத்து அதிகம் பயனளிக்கிறது.