இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Cluster Beans : ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறி கொத்தரவரங்காய்..!

Cluster Beans : ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறி கொத்தரவரங்காய்..!

கொத்தரவரங்காய் எனப்படும் க்ளஸ்டர் பீன்ஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியாது. இதுவும் பீன்ஸ் வகை தான் என்றாலும், அதிகமானோர் இதை வாங்குவதில்லை என்றே கூறலாம்.

Cluster beans benefits - newstamilonline

Cluster Beans:

இந்த காய்கறி சுவையில் அற்புதமானது என கூற இயலாது, ஆனால் அதன் குண நலன்களை பற்றி பேசினால், அது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் காய்கறியாக உள்ளது. கொத்தரவரங்காயில், ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கொத்தவரங்காய் அதிகம் பயிரிடப்படுகின்றன. அதன் அறிவியல் பெயர் ‘சாயா மோடிஸ்கஸ் டெட்ராகோனோலோபஸ்’.

பல மருத்துவ குணங்கள் இதில் காணப்படுகின்றன, அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

அதனை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்கலாம், என்பதோடு இதயம் தொடர்பான பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும்.

பலர் இதை சாலட் போல் பச்சை காய்கறியாக சாப்பிட பயன்படுத்துகிறார்கள்.

கொத்தவரங்காய் பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. புரதம், வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றை அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இரும்புச்சத்து இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

கொத்தவரங்காய் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் ஏ உங்கள் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.

கொத்தவரங்காயில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் உங்களை வயிற்று புண்களில் இருந்து பாதுகாக்க உதவும். வாதம் மற்றும் பித்தம் உள்ளவர்கள் இதனை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை இது அதிகப்படுத்தும்.

கொத்தவரங்காய்க்கு எப்பொழுதும் நோய் தீர்க்கும் தன்மையானது குறைவு. பத்தியம் இருந்து சாப்பிடுவோர் கொத்தவரங்காயை உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பத்தியம் முறிவு உண்டாகும் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாமல் போகும்.

கொத்தவரங்காய் சாப்பிட்டுவர எலும்பு மற்றும் பல்லானது உறுதிப்படும். பித்தமயக்கம் ஏற்படுவதை தடுக்கும் மாலைக்கண் நோயை குணப்படுத்தும்.

Also Read: Walking after eating: சாப்பிட்ட பிறகு வாக்கிங் செய்வது நல்லதா..?

கொத்தவரங்காயில் காணப்படும் அதிக அளவு நார்ச்சத்து இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

கொத்தவரங்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாது. மேலும், நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு கொத்தவரங்காய் ஒரு சக்திவாய்ந்த வழியாகும்.