Tamil NewsThatstamil Newsஇயற்கையோடு வாழ்வோம்கீரைகள்சமையல் குறிப்புகள்செய்திகள்

Green Leafy Vegetables: காய்கறிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் தெரியுமா..?

Green Leafy Vegetables : காய்கறிகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் தெரியுமா..?

அளவுக்கு மீறினால் ஆபத்தே!! இதை நாம் அனைவரும் அறிவோம். அந்த லிஸ்டில் காய்கறிகளும் சேர்ந்துள்ளன!

Green Leafy Vegetables

Eating Raw Vegetables :

காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமானவை

அவற்றை உங்கள் உணவில் சேர்ப்பது உங்களை ஆரோக்கியமாகவும், உங்களை நோயற்றவர்களாகவும் வைத்திருக்க உதவக்கூடியவை.

காய்கறிகளில் புரதங்கள், வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன.

எனவே, ஒவ்வொரு நாளும் காய்கறிகளை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

இந்த சத்தான காய்கறிகளை பல வழிகளில் நாம் தயாரித்து உண்கிறோம். இது நமக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

ஆனால் சில காய்கறிகள் உங்கள் உடலை வளர்ப்பதைத் தவிர, உங்களுக்கு வித்தியாசமான பக்க விளைவுகளைத்(side effects) தருகின்றன.

இந்த பக்க விளைவுகள் சிறிது நேரம் உங்களைத் தொந்தரவு செய்யலாம், ஆனால் தீங்கு விளைவிப்பதில்லை.

இந்த பட்டியலில் அப்படிப்பட்ட பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்ற சில காய்கறிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றை அதிகமாக சாப்பிட்டால் என்னென்ன நடக்கும் என்று இங்கே காணலாம்.

காளான் – தோல் பிரச்சனை

காளான்களில் வைட்டமின் டி அதிகப்படியாக காணப்படுகிறது. ஆனால் சிலருக்கு காளான்களை சாப்பிட்ட பிறகு தோலில் தடிப்புகள் வரும்.

உணவில் காளான்களைச் சேர்ப்பது சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.

ஆனால், காளான்களை பச்சையாக சாப்பிடும்போதுதான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.

கேரட் – தோல் நிறம்

எல்லோருக்கும் கேரட்(carrot) பிடித்தமான காயாகும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் நம் தோல் ஆரஞ்சு நிறமாக மாறும்.

கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால், அதிக கேரட் சாப்பிடுவதன் மூலம், தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும்.

கேரட் மட்டுமல்ல, அதிகமாக பூசணி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்க்கு ஆகியவற்றை சாப்பிடுவதாலும் சருமத்தின் நிறம் மாறும்.

பீட்ரூட் – சிறுநீரின் நிறம் மாறும்

அதிகமாக பீட்ரூட் (Beetroot) சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் மாறும். இளஞ்சிவப்பு நிறத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம்.

ஆனால் பீதியடைய ஒன்றுமில்லை, இது பீட்ரூட்டின் ஒரு பக்க விளைவாகும்.

ஆரஞ்சு சாறு(Juice)

பீட்டா கரோட்டின் போலவே, வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதும் நமது சிறுநீரின் நிறத்தை மாற்றும்.

ஒரே நாளில் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், சிறுநீரின் தோற்றம் மாறுபடுகிறது.

நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போதும் சிறுநீரின் நிறம் மாறுகிறது.

எனவே நாம் அதிக வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும்போது, ​​அதனுடன் ஏராளமான தண்ணீரை குடிக்க வேண்டும்.

Also Read: Muskmelon: கிர்ணி பழம் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

முட்டைக்கோஸ் – செரிமான பிரச்சினை

காலிஃபிளவர்(cauliflower) மற்றும் இந்த வகையின் பிற காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதால், இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படும்.

முட்டைக்கோசு ஆரோக்கியமான காய் என்றாலும், அதிகமாக உட்கொள்ளும்போது, அது ஜீரணிக்க கடினமானதாக கருதப்படுகின்றது.

குறிப்பாக பச்சையாக சாப்பிட்டால் அது மிகவும் தீங்கு விளைவிக்கும்.

இதில் ரஃபினோஸ் உள்ளது. இது ஒரு வகை கார்போஹைட்ரேட் ஆகும்.

இதை நம் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாது.

பெருங்குடலுக்குச் செல்லும்போது செரிக்கப்படாத காய்கறிகளால் வயிற்று அசெளகரியம் ஏற்படலாம்.

இதனால் நமக்கு வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.