இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Dry Eyes: குளிர்காலத்தில் கண்களை பராமரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

Dry Eyes: குளிர்காலத்தில் கண்களை பராமரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்..!

தற்போது பலரும் கண்கள் சார்ந்த பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பார்வைக் குறைவு, கண்களில் வறட்சி, கண்புரை, விழிப்புள்ளி குறைபாடு மற்றும் வேறுசில கண்சார்ந்த பிரச்சினைகளினால் அவதிப்படுகின்றனர்.

Food for Winter Season

Dry Eyes:

ஒரு பக்கம் அளவுக்கு அதிமான அழுத்தம் மற்றும் சந்தைக்கு வரும் புதிய தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமையாக இருப்பது போன்றவை கண்சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

மற்றொரு பக்கம் பருவகால கண் நோய்கள் அல்லது வெளிப்புற காற்றில் நிறைந்திருக்கும் மாசுகள் போன்றவை கண்சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன.

கண் வறட்சி

பொதுவாக கண்சாந்த நோய்களில் முக்கியமான ஒன்று கண் வறட்சி ஆகும். கண்களில் போதுமான அளவு கண்ணீர் சுரக்காமல், அதனால் கண்களில் தேவையான அளவு உராய்வு நடக்காமல் இருந்தால் கண் வறட்சி பிரச்சினை ஏற்படும்.

கண்ணீரில் இருக்கும் வெப்பத்தின் அளவும் கண் உலர்தல் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கிறது.

சில நேரம் கண்களை சரியாக பராமரிப்பவர்களுக்குக் கூட குறைவான ஈரப்பதம், குளிரான வெப்பநிலை மற்றும் அதிமான காற்று போன்றவை கண் வறட்சி பிரச்சினையை ஏற்படுத்துகின்றன.

ஆகவே குளிர் காலத்தில் கண்களை சிறப்பான முறையில் பாதுகாக்க கண் சிகிச்சை நிபுணர்கள் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

குளிர்காலத்தில் கண்களை சிறப்பான முறையில் பராமரிக்கும் முக்கியமான 5 பருவகால உணவுகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

நெல்லிக்காய்

வைட்டமின் சி சத்துக்களை அதிகம் கொண்டிருக்கும் நெல்லிக்காய் நமது முழுமையான உடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது.

குறிப்பாக நமது உடலில் இணைப்பை ஏற்படுத்தும் திசுக்கள் மற்றும் இரத்தக் குழாய்களை சீராக பராமரிப்பதன் மூலம் நமது கண் விழித்திரை சார்ந்த பிரச்சினைகளை நெல்லிக்காய் குறைக்கிறது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சுப்பழம் அதிமான அளவு வைட்டமின் சி சத்துக்களைக் கொண்டிருக்கிறது.

அது நமது விழிகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. மேலும் ஆரஞ்சுப்பழத்தில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நமது கண்களில் உள்ள கண்ணீரின் அளவை அதிகரித்து, கண்களில் வறட்சி ஏற்படுவதைக் குறைக்கிறது.

கொய்யாப்பழம்

கொய்யாப்பழம் குளிர்காலத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கும் பழமாகும். கொய்யாப் பழத்தில் அதிக அளவு ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

ஆகவே குளிர்காலத்தில் கொய்யாப் பழத்தை அதிகம் சாப்பிட்டால் அது நமது கண் பார்வையை சீர்படுத்துவதோடு வயதான காலத்தில் ஏற்படும் கண் சார்ந்த பிரச்சினைகளையும் குறைக்கும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது.

இந்த சத்துகள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவி செய்கின்றன. பீட்டா கரோட்டீன் கண் பார்வையை அதிகரிக்கிறது.

வைட்டமின் ஏ சத்து கண் உலர்தல் சார்ந்த பிரச்சினைகளைக் குறைக்கிறது.

பாலக்கீரை

பாலக்கீரை குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற முக்கியமான கீரையாகும். இந்தக் கீரையில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால் அது பார்வை அளிக்கும் நரம்பு சேதமடைந்துவிடாமல் தடுக்கிறது.

Also Read: Best Food for Diabetes Control: சர்க்கரை நோயை வெண்டைக்காய் எவ்வாறு கட்டுப்படுத்தும்..?

ஆகவே முழுமையான உடல் ஆரோக்கியம் பெறவும், கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் பாலக்கீரையை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.