கண்டுபிடிப்புசெய்திகள்தொழில்நுட்பம்

New Technology: உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி LED-ஐ எரிய வைக்கும் கைக்கடிகாரம்…!

New Technology: உடல் வெப்பத்தை மின்சாரமாக மாற்றி LED-ஐ எரிய வைக்கும் கைக்கடிகாரம்…!

தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர் (TEG) கொண்ட அணியக்கூடிய கைக்கடிகாரம் உடல் வெப்பத்தை ஒரு LED-க்கு சக்தி அளிக்க போதுமான மின்சாரமாக மாற்றுகிறது.

New science inventions - newstamilonline

இந்த தொழில்நுட்பத்தால் எதிர்காலத்தில், ஸ்மார்ட்வாட்ச்களை இயக்குவதற்கும் காலம் காலமாக பயன்படுத்தும் சார்ஜரின் (chargers) தேவையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் முடியும்.

New Technology – ஸ்மார்ட்வாட்ச்:

“எரிசக்தி வழங்குதல் எப்போதுமே ஒரு பெரிய பிரச்சினையாகும், ஆகையால் இது எரிசக்தி நெருக்கடியைப் போக்க உதவும்” என்று சீனாவின் ஹார்பின் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கியான் ஜாங்( Qian Zhang ) கூறுகிறார்.

இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான இவர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக TEG களில் பணியாற்றியவர்.

தற்போது TEG கள் பரவலான பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கடினமானவை.

பாலியூரிதீன் மற்றும் ஒரு நெகிழ்வான மின்முனைக்கு இடையில் மெக்னீசியம் மற்றும் பிஸ்மத்(bismuth) பொருள்களை (TEG பொருட்கள்) கொண்டு உருவாக்கப்படும் ஒரு layer அந்த கைக்கடிகாரத்தை மனிதனின் கையைச் சுற்றிக் கொள்ள உதவுகின்றன.

இதன் விளைவாக 115 மில்லிமீட்டர் நீளமும் 30 மிமீ அகலத்திற்குக் குறைவாகவும் ஒரு கைக்கடிகாரம் உள்ளது.

குளிர்காலம் தான் சிறந்தது:

இது மனித தோலின் வெப்பநிலைக்கும் சுற்றுப்புற அறை வெப்பநிலைக்கும் இடையிலான வேறுபாட்டை கொண்டு மின்சார சக்தியை உருவாக்குகிறது.

பின்னர் இச்சாதனம் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு 20.6 மைக்ரோவாட்டுகளை உருவாக்க முடியும். இது ஒரு LED பல்பு எரிய போதுமானது.

மேலும் சுற்றுச்சூழல் வெப்பநிலை இந்த செயல்திறனை மிகவும் பாதிக்கிறது என்று ஜாங் கூறுகிறார்.

இதற்கு குளிர்காலம் தான் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார், ஏனென்றால் குளிர்காலத்தில் தான் சுற்றுப்புற வெப்பநிலை குறைவாகவும், உடல் வெப்பநிலையுடன் வித்தியாசம் அதிகமாகவும் இருக்கிறது.

இந்த கைக்கடிகாரத்தை ஒரு கையில் 10000 க்கும் மேற்பட்ட முறை கட்டி, அவிழ்த்து கட்டுவதால் இதன் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகழ்வதில்லை என்று சோதனைகள் காட்டுகின்றன.

இதனால் கைக்கடிகாரத்தை அணியும்போது அணிபவர்கள் வேறு எந்தவிதமான விளைவுகளையும் அனுபவிப்பதில்லை.

“சார்ஜ் செய்ய பேட்டரிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மனித உடலில் இருந்து சக்தியை பெறும் யோசனையை நான் மிகவும் விரும்புகிறேன்” என்று நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அணியக்கூடிய பொருட்களில் ஆர்வமுள்ள தயாரிப்பாளர் ரோல்ஃப் ஹட்(Rolf Hut) கூறுகிறார்.

Also Read: Space force: 2030’க்குள் விண்வெளியில் தனி ராஜ்ஜியம் அமைக்க ரஷ்யா திட்டம்..!

மேலும் இதன் அடுத்த கட்டமாக கைக்கடிகாரத்தில் TEG இன் அளவை அதிகரிப்பதன் மூலமும், பெரிய மின்னணுவியல் சக்தியை இயக்குவதற்கு ஒரு மின்னழுத்த மாற்றி ஒருங்கிணைப்பதன் மூலமும் செயல்திறனை மேம்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

ஆனால் அவ்வாறு செய்ய முழு சாதனத்தின் அளவையும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.