செய்திகள்தொழில்நுட்பம்

Health Tips: உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த வழிகள்..!

Health Tips: உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க சிறந்த வழிகள்..!

இயற்கையின் பெரிய அற்புதங்களில் ஒன்று கணினி போல செயல்பட்டு மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக விளங்குகிற மூளைதான்.

மூளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மிக நுண்ணியதாகவும், தெளிவாகவும் இருக்கின்றன.

Brain Active Tips

Health Tips:

ஐந்து அறிவு கொண்ட விலங்கினங்களில் இருந்து நம்மை வித்தியாசப்படுத்தி, ஆறு அறிவு கொண்ட மனித இனமாக நிலைநிறுத்தி வருவதே இந்த மூளைதான்.

எனவே, நல்ல விஷயங்களுக்கு உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், அதிக ஈடுபாட்டுடனும் வைத்திருக்க தேவையான எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கற்றலில் ஆர்வம்

உங்கள் மூளையை சுறுசுறுப்பாக, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம்.

சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும்.

செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும்.

எனவே, நீங்கள் ஒவ்வொரு புதிய நாளை துவங்கும் போதும், அன்றைய புதிய விஷயங்களில் கற்றலின் அவசியத்தை புரிந்துகொள்ளுங்கள்.

பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

புத்தகங்களைப் படியுங்கள்

நல்ல வாசிப்பிற்கு கவனம் மிக அவசியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல்களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது.

இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும்.

வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும்.

ஊட்டச்சத்துள்ள உணவுகளும், தூக்கமும் அவசியம்

நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது.

சரியான ஓய்வு இல்லாவிட்டால் மந்தத்தன்மை, சோர்வு ஏற்படுவதோடு சில வியாதிகள் தொற்றவும் வாய்ப்பிருக்கிறது.

மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்

சரித்திரம் முதல் நிகழ்கால நடைமுறை வரை அத்தனையும் நினைவில் வைத்திருக்க, எந்தவொரு விஷயத்தையும் முதலில் நினைவில் நிறுத்தி, பின்னர் முறையானப் பயிற்சிகள் மூலம் நினைவை மீட்டெடுக்க வேண்டும்.

புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது அவசியம்

நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது மூளையை புத்துணர்ச்சி அடைய செய்து நமது உடல் நலனை பாதுகாக்கிறது.

மூளை சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமானால் கவலைகள் இருக்கக் கூடாது. மன அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்.

உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும் புத்துணர்ச்சியாக செயல்பட முடியும்.

Also Read: Spinal fitting therapy: நடக்க இயலாதவர்களை நடக்க செய்யும் முதுகுத்தண்டு பொருத்துதல் சிகிச்சை..!

யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். ஏனெனில், ஓர் இசையைக் கற்றுக்கொள்ளும் போதும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது.

உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க மேற்கண்ட வழிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்.