இயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Donate Blood: யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்? செய்ய கூடாது?

Donate Blood: யாரெல்லாம் இரத்த தானம் செய்யலாம்? செய்ய கூடாது?

நம் வாழ்வில் ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறையும் ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது.

Who can donate blood - newstamilonline

Donate Blood:

மேலும், ஒருவர் இரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். வருடத்திற்கு ஆறு முறை வரை ஒருவர் இரத்த தானம் செய்வது பாதுக்காப்பானது ஆகும்.

இரத்த தானத்தில் செய்யும் போது தொற்றுநோய்கள் ஏதும் நம்மை தாக்காத வகையில் , ஒவ்வொரு முறை இரத்தம் எடுக்கும்போதும் புதிய உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும் அனைவரும் இரத்த தானம் செய்ய முடியாது. டிமென்ஷியா அல்லது எச்.ஐ.வி வைரஸ் போன்று தொற்று உள்ளவர்கள் இரத்த தானம் செய்ய கூடாது.

அதன் மூலம் அவர்கள் தொற்றை மற்றவர்களுக்கு பரப்பி விட நேரிடும். எனவே எந்த வித நோயும் இல்லாதவர்கள் மட்டுமே இரத்த தானம் செய்ய வேண்டும்.

ஒருவர் எத்தனை முறை இரத்த தானம் செய்யலாம்?

இரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் இரத்தத்தை முழுவதுமாக தானம் செய்யலாம். அல்லது இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற இரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம்.

இரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள இயந்திரமானது இரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது.

ஒவ்வொரு இரத்த தானம் செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுகாப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

நியூயார்க் இரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை இரத்த தானம் செய்ய முடியும் என்று கூறுகிறார். அதே போல நீங்கள் இரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்.

யாரெல்லாம் இரத்த தானம் செய்ய கூடாது?

இரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையை கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் தங்கள் பெற்றோர் அல்லது பாதுக்காவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம்.

75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே இரத்த தானம் செய்ய முடியும்.

Also Read: Banana peel benefits: வாழைப்பழத்தோல் வாழைப்பழத்தை விட நன்மை அளிக்கக் கூடியது..!

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் லேசான இரத்த சோகை நோய் ஏற்படலாம்.

எனவே அவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே இரத்த தானம் செய்யலாம்.