Today Tamil News Onlineஇயற்கையோடு வாழ்வோம்செய்திகள்

Green Chilli: தினம் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்தால் இதெல்லாம் நடக்குமா..?

Green Chilli: தினம் ஒரு பச்சை மிளகாய் சாப்பிட்டு வந்தால் இதெல்லாம் நடக்குமா..?

நீங்கள் காரமான உணவை விரும்பும் நபரா?

உங்கள் உணவில் காரம் தூக்கலாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் பச்சை மிளகாய் சரியான மூலப்பொருள்.

Green Chilli Benefits

Green Chilli :

பச்சை மிளகாய் உங்கள் உணவை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், பல நன்மைகளையும் வழங்குகிறது.

எனவே இவ்வளவு நன்மைகளைத் தன்னுள் கொண்ட பச்சை மிளகாயை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

உணவிற்கு காரத்தை அளிக்கும் பச்சை மிளகாய் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து, எடையைக் குறைக்க உதவுவது என்று பல நன்மைகளைத் தரக்கூடியது.

அதோடு பச்சை மிளகாயில் கலோரிகள் குறைவு மற்றும் கொழுப்பு இல்லாத உணவுப் பொருளும் கூட.

பச்சை மிளகாயின் ஆரோக்கிய நன்மைகள்:

பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள்.

ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன.

இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.

இதய ஆரோக்கியம்

பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது.

மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறையும்.

சளி, ஜலதோஷம் நீங்கும்

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது சவ்வுகளிடையே இரத்த ஓட்டத்தைத் தூண்டி, உடலில் உற்பத்தியாகும் சளியை இளகச் செய்கிறது.

பச்சை மிளகாய் சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

How To Increase Immunity :

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

தற்போதைய சூழ்நிலையில் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

அதற்கு உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக பச்சை மிளகாய் இதற்கு நிச்சயம் உதவும்.

ஏனெனில் பச்சை மிளகாயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளது.

ஆனால் பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் தான், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும்.

இல்லாவிட்டால், வெளிக்காற்று, சூடான மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், அதில் இருக்கும் வைட்டமின் சி குறைந்துவிடும்.

நீரிழிவு நோய் ஒரு பரவலான நோய் மற்றும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தங்கள் உணவில் நீரிழிவு நோயாளிகள் பச்சை மிளகாயைச் சேர்க்கலாம். ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவை சமப்படுத்த உதவுகிறது.

இருப்பினும், பச்சை மிளகாய், நீரிழிவு மருந்துகளுடன், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட குறைவாக இருக்கும்.

எனவே, நீரிழிவு நோயாளிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பச்சை மிளகாயின் பக்க விளைவுகள்:

பொதுவாக அளவுக்கு அதிகமானால் எப்பேற்பட்டதும் தீங்கை விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிவோம்.

இது பச்சை மிளகாய்க்கும் பொருந்தும்.

பச்சை மிளகாயில் உள்ள எரிச்சல் ப்ளேவர்கள், தீவிரமான நெஞ்செரிச்சலை உண்டாக்கும் திறன் கொண்டவை.

அதோடு பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்குவதோடு, உடலினுள் அழற்சி/காயங்களையும் உண்டாக்கும்.

Also Read: Side Effects of Aloe Vera: கற்றாழை நல்லதுதான்..! ஆனாலும் அதிகமாக பயன்படுத்துவதால் இந்த பக்க விளைவுகள் கூட வரலாம்..!

பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால், அது சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வலிமிக்க வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும்.

எனவே பச்சை மிளகாயை அளவாக சாப்பிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *